உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் ரூ.6.38 லட்சம் பறிமுதல் பெண் சார் - பதிவாளர் மீது வழக்கு

காரில் ரூ.6.38 லட்சம் பறிமுதல் பெண் சார் - பதிவாளர் மீது வழக்கு

ஓசூர் : தர்மபுரி, எஸ்.வி., தெருவைச் சேர்ந்தவர் சாய்கீதா, 58; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சார் - பதிவாளர். பத்திரப்பதிவுகளுக்கு அலுவலகத்துக்கு வெளியே புரோக்கர்களால் லஞ்சம் பெற்று, இரவில் வீட்டிற்கு செல்லும்போது பணத்தை கொண்டு செல்வதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.அவரை பிடிக்க, தேன்கனிக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலகம் அருகே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு, 9:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்து, 'ஹூண்டாய் கிரெட்டா' காரில் சாய்கீதா புறப்பட்டார்.அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார், கெலமங்கலம் சாலையில் ஒருவர் காரை நிறுத்தி பையை கொடுத்தார். உஷாரான லஞ்ச ஒழிப்பு போலீசார், சாய்கீதா காரை சிறிது துாரத்தில் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த பையில் இருந்த பணம் குறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசவே, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். பையில், 6.38 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். துறை ரீதியாக விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.தொழில் நகரான ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை சுற்றுப்புறங்களிலும் நிலங்களின் மதிப்பு உயர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சார் - பதிவாளர்கள் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெறுகின்றனர். இந்த பணத்தை வசூலிக்க புரோக்கர்களை நியமித்து உள்ளனர். அலுவலகத்துக்கு வெளியே வசூலித்து, வீட்டுக்கு செல்லும்போது பெற்றுக் கொள்கின்றனர். இந்த டெக்னிக்கை தான் சாய்கீதாவும் கடைப்பிடித்துள்ளார் என்கின்றனர் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை