உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு

கண்காணிப்பை தீவிரமாக்க எஸ்.பி., உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை-களில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். நிலுவை வழக்குகள், ரேஷன் பொருட்கள் கடத்-தலில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், அதன் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கைப்பற்றப்பட்ட வாக-னங்களை விரைந்து ஏலத்தில் விட அறிவுறுத்தினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையோர கர்நாடக, ஆந்திர எல்லைப்-பகுதிகளை ஒட்டிய, குருவிநாயனப்பள்ளி, வேப்பனஹள்ளி சோதனைச்சாவடிகளிலும் ஆய்வு செய்து, கண்காணிப்பை தீவரப்படுத்த கூறினார். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு எங்கிருந்து ரேஷன் அரிசி கிடைக்கிறது. ரேஷன் கடை விற்பனை-யாளர்களுக்கும் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா, ரேஷன் அரி-சியை எந்தெந்த பகுதிகளில் பதுக்குகிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பெரியசாமி மற்றும் உண-வுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை