| ADDED : மே 31, 2024 03:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த, 7ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் தாய்க்கு உதவியாக இருந்து வருகிறார். அப்போது அங்கு கிருஷ்ணகிரி, ரயில்வே காலனியை சேர்ந்த மனோஜ், 19, என்ற வாலிபர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். மாணவியின் மொபைல் எண்ணை வாங்கிய மனோஜ், மாணவியிடம் தான் சொல்வது போல் கேட்க வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதை கவனித்த மாணவியின் அக்கா கேட்டபோது, நடந்த விபரங்களை மாணவி கூறியுள்ளார்.இது குறித்து கடந்த, 25ல் கேட்க சென்ற மாணவி மற்றும் அவரது அக்காவை, மனோஜ் மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். மாணவியின் அக்கா புகார் படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, மனோஜை தேடி வருகின்றனர்.