டாஸ்மாக்கில் 2வது முறையாக திருட்டு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டையில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் காலை ஊழியர்கள் கடை திறக்க வந்தபோது, கடையின் வலது புற சுவரில் துளை போடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளே சென்று பார்த்தபோது, 17 மதுபாட்டில் திருட்டு போனது தெரிந்தது. இது தொடர்பாக மேற்பார்வையாளர் ராமசாமி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதே டாஸ்மாக் கடையில், கடந்தாண்டு ஜூலை மாதம், சுவரில் துளையிட்டு, 10 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானம் திருட்டு போனது. இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ளதால், கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.