மேலும் செய்திகள்
செங்கையில் 36 ஏரிகள் நிரம்பின
28-Nov-2024
தர்மபுரி, டிச. 4-பெஞ்சல் புயலால், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நவ., 30 முதல் நேற்று முன்தினம் இரவு வரை கனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்தானது. அதிக பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 74 ஏரிகளில் குப்பூர் குருமன குட்டை ஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, வெள்ளோலை கோம்பைப்பள்ளம் ஏரி, தர்மபுரி ராமக்காள் ஏரி, அரூர் அடுத்த பையர்நாயக்கனஹள்ளி ஏரி, வீரப்பநாயக்கன்பட்டி முனியப்பன் கோவில் பள்ளம் ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரம் ஏரி, வாச்சாத்தி ஏரி, பாலக்கோடு அடுத்த அத்திமுட்லு குமாரசெட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி என, 11 ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளன.இதே போன்று, தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 546 ஏரிகளில், 126 ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், 166 ஏரிகளில், 0 முதல், 10 சதவீதம் தண்ணீர் மட்டும் உள்ளது. 504 குளங்களில், 57 குளங்கள் நிரம்பிய நிலையில், 139 குளங்களில், 0 முதல், 10 சதவீதம் தண்ணீர் மட்டும் உள்ளது.
28-Nov-2024