மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
07-Oct-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அருகே, கல்லுாரி வேன் கவிழ்ந்த விபத்தில், 14 மாணவ, மாணவியர் காயமடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டிலுள்ள, யூனிக் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவர்களை கல்லுாரி பஸ் ஏற்றி வருவது வழக்கம். கடந்த, 2 நாட்களுக்கு முன் கல்லுாரி பஸ் பழுதானதால், தனியார் வேன் மூலம் மாணவர்கள் கல்லுாரிக்கு அழைத்து வரப்பட்டனர்.நேற்று, 6 மாணவர்கள் உட்பட, 28 மாணவியரை ஏற்றிய தனியார் வேன் கல்லுாரிக்கு வந்து கொண்டிருந்தது. வேனை, ஊத்தங்கரை அடுத்த பூர்களப்பள்ளியை சேர்ந்த சஞ்சீவன், 23 என்பவர் ஓட்டினார். காலை, 8:30 மணியளவில் கொல்லநாயக்கனுார் அருகே, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, வேன் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சஞ்சீவனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், இதில், 14 மாணவ, மாணவியருக்கு, எலும்பு முறிவு மற்றும் காயமும், 10 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. விபத்தில், 10 மாணவ, மாணவியர் காயமின்றி தப்பினர்.காயமடைந்த அனைவரும், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Oct-2025