ஓய்வுபெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் 14வது ஆண்டு விழா
கிருஷ்ணகிரி: ஓய்வுபெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின், 14வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி, தர்மபுரி ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின், 14வது ஆண்டு விழா மற்றும் மாவட்ட பொதுக்-குழுக் கூட்டம், நேற்று கிருஷ்ணகிரியில் நடந்தது. மாவட்ட தலைவர் கோபிநாத் ராவ் தலைமை வகித்தார். மாவட்ட செய-லாளர் கோபால் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெங்க-டேசன் வரவு, செலவு கணக்கை வாசித்தார். ஓய்வுபெற்ற தாசில்-தார்கள் ஜனார்த்தனராவ், சரவணபவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்திய, 2016ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்து திருத்தி அமைக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், 70 வயது நிறையும் போது, 10 சதவீ-தமும், 80 வயது நிறையும் போது மேலும், 10 சதவீதமும், கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், தெலுங்கானா மாநில அரசு அமல்படுத்தி உள்ளவாறு, அதே விகிதத்தில் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்டத்தில், தற்போது வழங்கும், 50,000 ரூபாயை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இத்திட்டத்தை குடும்ப ஓய்வூதியர்களுக்கும் நீடிப்பு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.