உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்

விதி முறைகளை பின்பற்றாத 15 உணவகத்துக்கு அபராதம்

தர்மபுரி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக ஓட்டல்கள், துரித உணவகங்கள், சில்லி சிக்கன் கடைகள் மற்றும் நடமாடும் சாலை ஓர சிற்றுண்டி கடைகள் என, 100க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.இதில், கடைகளில் பழைய கிரில்டு சிக்கன், தந்துாரி சிக்கன், பாதியளவு பொறித்த சில்லி சிக்கன், 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், அரசு தடை செய்த நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேற்படி விதிமுறைகள் பின்பற்றாத, 2 கடை உரிமையாளர்களுக்கு தலா, 2,000, ரூபாய், 13 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, 15 கடைகளுக்கு, 17,000 ரூபாய் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை