வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த பெரிய கோட்டகுளம் பஞ்.,க்கு உட்பட்ட சோலையூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் இளம்பருதி, 43. இவர் நேற்று முன்தினம் சோலையூரில் உள்ள ஒரு நிலத்தை அளக்க உத-வியாளர்களுடன் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 48, அவரது மனைவி சக்தி, 43, ஆகியோர், 'எங்கள் நிலத்தில் நீங்கள் எப்படி அளக்கலாம்' எனக்கூறி, இளம்பருதி-யிடம் தகராறு செய்து மிரட்டினர். இளம்பருதி புகார் படி, வி.ஏ.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்த, வேடியப்பன் அவ-ரது மனைவி சக்தி ஆகிய இருவரையும், கல்லாவி போலீசார் கைது செய்தனர்.