உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்கிலிருந்து விழுந்த 2 பேர் பலி

பைக்கிலிருந்து விழுந்த 2 பேர் பலி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, போடிநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 18. கூலித்தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த நாகேஷ், 28, சக்திவேல், 20, ஆகியோரும், கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்றனர். நாகேஷ் பைக்கை ஓட்டி சென்றார். மரக்கட்டா அருகே சாலை வளைவில் சென்றபோது, சாலையோர தடுப்பில் பைக் மோதி, மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் அதிகாலை கார்த்திக் உயிரிழந்தார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகேஷ், நேற்று காலை உயிரிழந்தார். சக்திவேல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை