உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடையாளம் தெரியாத 2 ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை அடுத்த நாயக்கனுார் கூட்ரோடு அருகே, ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில், நேற்று முன்தினம், 50 வயது மதிக்கதக்க நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியாக சென்ற வாகனம் மோதியதில் பலியானார். அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. சிங்காரப்பேட்டை வி.ஏ.ஓ., ஆனந்தன் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி கூட்ரோடு அருகே, 52 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சடலமாக கிடந்தார். அவர் யார் என்று விபரம் தெரியவில்லை. வடமலம்பட்டி வி.ஏ.ஓ., பழனிவேல் புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி