2 வயது குழந்தை சாவு
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கண்ணாம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன், 27. இவரது மனைவி தெய்வானை, தம்பதியருக்கு, 2 வயதில் ஹிமவர்ஷா என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த, 8ல் தம்பதியர் தர்மபுரிக்கு சென்றுவிட்டனர். பாலமுருகனின் தந்தை பெரியண்ணன் குழந்தைக்கு ஊட்டச்சத்து மாவு சாப்பிட வைத்து துாங்க வைத்துள்ளார். மாலை, 6:00 மணிக்கு பாலமுருகன், மனைவியுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரைதள்ளியிருந்தது. இதையடுத்து, பாலமுருகன் குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.