உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரியில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரியில் 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை: பி.ஏ., தமிழ், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., (வேதியல், கணிணி அறிவியல், நுண்ணுயிரியல்) ஆகிய பாடப்பிரிவுகளில், தமிழக அரசு ஒப்புதல் அளித்த, 20 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (16ம் தேதி) நடக்கிறது. இதுவரை சேர்க்கை கிடைக்காத மாணவர்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து, விரும்பும் பாடங்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு கட்டணமாக கலைப்பிரிவுக்கு, 2,905 ரூபாய், அறிவியல் பாடப்பிரிவுக்கு, 2,925- ரூபாய், கணினி அறிவியல் பாட பிரிவுக்கு, 2,025 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ