மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
14-Jun-2025
ஓசூர், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, ஹோண்டா ஜாஸ் காரை நிறுத்தி சோதனை செய்த போது, 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.காரில் வந்த, கர்நாடகா மாநிலம், ஜிகினியை சேர்ந்த பாபுலால், 42, வேலுார் மாவட்டம், வாலஜாபாத் நரேஷிராஜ் தெருவை சேர்ந்த ரத்ரம் தேவாசி, 32, அதே பகுதியை சேர்ந்த ஹீமாராம், 24, ஆகிய, 3 பேரிடம் விசாரித்த போது, பெங்களூருவில் இருந்து வேலுாருக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், 60,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
14-Jun-2025