மேலும் செய்திகள்
தனியார் ஊழியர் உட்படஇரண்டு பேர் மாயம்
01-Sep-2025
ஓசூர்;ஓசூர் அருகே பாகலுாரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கர்நாடகா மாநிலம், கோலார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.யு.சி., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த மாதம், 28ம் தேதி காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து சென்ற மாணவி கல்லுாரிக்கு செல்லாமல் மாயமானார். அவரது தாய் நேற்று முன்தினம் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், லோகேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர் அடுத்த உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி யசோதா, 47. கடந்த, 26ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். கணவர் புகார்படி, மத்திகிரி போலீசார் தேடி வருகின்றனர்.பர்கூர் அருகே ஐகொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகள் விஜயலட்சுமி, 22. கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கால் சென்டரில் வேலை செய்கிறார். கடந்த, 20ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை புகார் படி, பர்கூர் போலீசார் தேடி வருகின்றனர்.
01-Sep-2025