மேலும் செய்திகள்
மாணவி உட்பட 2 பேர் மாயம்
23-Nov-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வேப்பலம்-பட்டியை சேர்ந்தவர் கார்த்திக், 38. கர்நாடகா மாநிலம், பெங்க-ளூரு கோரமங்களா பகுதியில் தங்கி, கொத்தனாராக வேலை செய்து வந்தார்; கட்டடத்தின் இரும்பு கம்பியை கார்த்திக் திருடி-யதாக கூறி, காண்ட்ராக்டர் கிருஷ்ணன் கேள்வி கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த அக்., 19 நண்பகல், 12:00 மணிக்கு, ஓசூர் மஞ்சுநாதா தியேட்டர் அருகே இருந்து வெளியே சென்ற கார்த்திக் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பாரதி, 36, கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.* ஓசூர் அடுத்த பாகலுார் அருகே சூடாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி பாக்கியம்மா,35; கூலித்தொழிலாளி. கடந்த, 12 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் பாகலுார் போலீசில் கொடுத்த புகாரில், சூடாபு-ரத்தில் வசித்து வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தப்ப-ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.* கெலமங்கலம் அருகே ஜெ.காருப்பள்ளியை சேர்ந்தவர் சையத் கான் மகள் ஹர்ஷியா கனம், 22. நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் திரும்பி வர-வில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த ஜமீர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்
23-Nov-2024