உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு காப்பு

இரும்பு கம்பி வேலியை திருடிய 3 பேருக்கு காப்பு

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்தவர் சீனி-வாசன், 62. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் கிராமத்தில் இவருக்கு நிலம் உள்ளது. இதற்குள் நேற்று முன்தினம் அதிகாலை அத்துமீறி நுழைந்த, 3 பேர் கொண்ட கும்பல், 30 கிலோ அளவிற்கு இரும்பு கம்பி வேலிகளை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றது. இதன் மதிப்பு, 4,200 ரூபாய். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், 3 பேரையும் பிடித்து தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்-தனர். சீனிவாசன் கொடுத்த புகார் படி, போலீசார் விசாரித்த-போது, திருட்டில் ஈடுபட்டது, கச்சுவாடியை சேர்ந்த செந்தில் நாயக்கர், 30, சாலிவாரத்தை சேர்ந்த பிரேம்குமார், 24, மற்றும் சீனிவாசன், 29, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரும்பு கம்பி வேலியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை