உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டைக்கு 30 யானைகள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டைக்கு 30 யானைகள் விரட்டியடிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம் ஊடே-துர்க்கம் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 30க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த, 2ல், ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்காட்-டிற்கு சென்றன.அவற்றை விரட்டும் முயற்சியில், வனச்சரகர் பார்த்தசாரதி தலை-மையிலான, 20 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை வனச்ச-ரகம், பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.இதற்கிடையே மற்றொரு குழுவாக, ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்ட, 20 க்கும் மேற்பட்ட யானைகள், யு புரம், குரும்பட்டி, பாவாடரப்பட்டி கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தன. தேன்கனிக்-கோட்டை வனப் பகுதியில் முகாமிட்ட வயதான, 'கிரி' என்ற ஆண் யானை, நேற்று காலை நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து, விவசாயி கேசவன் என்பவரது தோட்டத்தில் விளைந்திருந்த, ராகி, சோள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி-யது.பொதுமக்கள் விரட்டியதால் மீண்டும் வனப் பகுதிக்கு சென்றது. யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாவதால், பல குழுக்க-ளாக முகாமிட்டுள்ள யானைகளை ஒன்றிணைந்து, கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை