உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைக்கு சீல்

காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், உணவு பாதுகாப்பு துறை-யினர் மற்றும் போலீசார் இணைந்து, புகையிலை பொருட்கள் விற்ற, 4 கடைகளுக்கு, 'சீல்' வைத்து, அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா உத்தரவின் படி, காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி எதிரில் தாபா ஹோட்டல், மாட்லாம்பட்டியில் ஒரு மளிகை கடை மற்றும் அரசு பள்ளி அருகில், ஒரு குடிநீர் கேன்கள் சப்ளை செய்யும் கிடங்கு, பெரியாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள ஒரு மளிகை கடை என, 4 கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்த, 4 கடைகளுக்கு தலா, 25,000 அபராதம் விதித்து, 15 நாட்கள் கடை இயங்க தடை விதித்து,'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ