உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி: -ஊத்தங்கரை அருகே, அம்மன்கோவில்பதி கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி, 20; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 22- இரவு முதல் காணவில்லை. அவரது பெற்றோர் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.சிங்காரப்பேட்டை அருகே சூரக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் மனைவி சுவலட்சுமி, 27; இவரை கடந்த, 19 முதல் காணவில்லை. அவரது கணவர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சூரக்கல்மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 25, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவரை கடந்த, 8 முதல் காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில், புதுப்பாளையத்தை சேர்ந்த ராமன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.ராயக்கோட்டையை மேல்மஜித் தெருவை சேர்ந்தவர் ரபிக் மகள் ஆயிஷா, 24; இவர் கடந்த, 22 மதியம் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த முகம்மது சாது, 35, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை