உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 3 வனச்சரகத்தில் 85 யானைகள் முகாம்; விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு

3 வனச்சரகத்தில் 85 யானைகள் முகாம்; விரட்ட முடியாமல் வனத்துறை தவிப்பு

ஓசூர்: தமிழக எல்லையிலுள்ள ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை வனச்சரகங்களில், 85க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக முகாமிட்டுள்ளன. அவற்றை, கர்நாடகாவிற்கு விரட்ட முடியாமல், வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து சமீபத்தில், 85க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இதில், 50 க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 15க்கும் மேற்பட்ட யானைகளும், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. இவை இரவில் வனத்தையொட்டிய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மூன்று வனச்சரகத்திலும் பல குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை ஒன்றிணைந்து, கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டும், இதுவரை முடியவில்லை.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 20 க்கும் மேற்பட்ட யானைகள், வனத்துறையினர் கண்காணிப்பையும் மீறி, ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. இவை, அருகிலுள்ள ஓசூர் வனச்சரகத்திற்கு இடம் பெயர வாய்ப்புள்ளதால், பயிர் சேதம் மேலும் அதிகரிக்கும். ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அவற்றை விரும்பி உண்ணும் யானைகள், ராயக்கோட்டை, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளதால், பயிர்களை காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகளும், யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்ட முடியாமல், வனத்துறையினரும் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி