உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி

மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி

ஊத்தங்கரை: திருவணப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ராஜாமணி, 43, வேடியப்பன், 55. இவர்கள் தங்களது விவ-சாய தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கமாக மேய்ச்சல் முடித்து விட்டு, நேற்று முன்தினம் தோட்டத்திலுள்ள கொட்டகைகளில் மாடுகளையும், அதன் கன்றுகளையும் கட்டி வைத்து சென்றனர். நேற்று காலை பார்த்தபோது ஒரு பசு மாடு, மூன்று கன்றுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. திருவணப்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் பரிசோதனை செய்தார். கடந்த, 6 ல், முனியம்மாள் என்-பவர் தோட்டத்தில், 2 ஆடுகள், கடந்த 8 ல், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் தோட்டத்தில் ஒரு கன்று குட்டி, மர்ம விலங்கு கடித்து இறந்தன. தொடர்ந்து கன்று குட்டிகள் பலியா-வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கால்நடைத்துறை-யினர், ஆடு, மாடுகள், தெரு நாய் கடித்து இறந்ததா, வேறு ஏதேனும் விலங்கு கடித்ததா என ஆய்வு செய்வதாக தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை