உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை

நடைபாதை கடை வியாபாரிகளிடம்சுங்கம் வசூலித்தால் நடவடிக்கைகிருஷ்ணகிரி, அக். 4-ஓசூர் மாநகராட்சி, நடைபாதை கடை வியாபாரிகளிடம் சுங்கம் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் யாருக்கும் வழங்கவில்லை. முறைகேடாக சுங்க கட்டணம் வசூலிக்கும் நபர்கள் குறித்து, பொது மக்கள் ஓசூர் மாநகராட்சிக்கு, 04344 -247666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி