குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி: குடியரசு தினத்தன்று தொழிலாளர்ளுக்கு விடுமுறை அளிக்காத, 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவ-னங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழி-லாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில், அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்-பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவித்து, அதன் நகலை தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்-தன்று நிறுவனத்தில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். நேற்று, குடியரசு தினத்தன்று மேற்படி சட்ட விதிகளின் கீழ், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில், 31 கடைகள், 49 உணவு நிறுவனங்கள் மற்றும், 7 மோட்டார் போக்-குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 87 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 25 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் மற்றும், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 75 நிறு-வனங்களின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்-ளது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.