மேலும் செய்திகள்
'இ.பி.எஸ்.,க்கு ஆலோசனை வழங்கியவர் இளங்கோவன்'
21-Oct-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், சூளகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், செயல்வீரர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.ஒன்றிய செயலர் பாபு வெங்கடாசலம் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம், கிழக்கு மாவட்ட துணை செயலர் ராமன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலர் சதீஷ்குமார், ஒன்றிய செயலர்கள் மாதேஷ், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Oct-2024