உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வயலில் பணியாற்றிய தொழிலாளர்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

வயலில் பணியாற்றிய தொழிலாளர்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

கிருஷ்ணகிரி: சூளகிரி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, சின்னாரன்தொட்டி, புக்கசாகரம் அத்திமுகம் உள்பட, 40 கிராமங்களில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:கடந்த, 2019 லோக்பா தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், காங்., ராகுலும் சேர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும், 6,000, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை நாட்கள், 150 நாளாக அதிகரிப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து என, அறிவித்தனர். ஆனால் எதையும் செய்யவில்லை. கடந்த, 2021 சட்டசபை தேர்தலிலும் ஸ்டாலின், 520 வாக்குறுதிகள் அளித்தார். காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றினார். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும், எதையும் செய்யவில்லை. பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைக்காமல், ஜெயலலிதாவின் கனவுகளை கலைத்து விட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால் ஜெயலலிதா, மோடியா, இந்த லேடியா என கேட்டு, பா.ஜ.,வை வீழ்த்தியவர். அவரது கனவுகளை, நாங்கள் தற்போது நிறைவேற்றி வருகிறோம். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி