உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்

அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்

கிருஷ்ணகிரி:தமிழகத்தில், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதை கண்டித்து நேற்று, கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் பள்ளி, கல்லுாரி அருகில், பஸ் ஸ்டாண்ட் என அனைத்து இடத்திலும் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. கடந்த, 2022 - 23 ஆண்டில் சட்டசபையில் கொள்கை விளக்க குறிப்பில் பேசிய முதல்வர், போதை பொருட்கள் தொடர்பாக, 2,348 வழக்குகள் பதியப்பட்டு, 148 பேர் கைது செய்யப்பட்டதாக கூறினார். அப்படியானால் மீதமுள்ளவர்கள், தி.மு.க.,வினராகவோ அல்லது அவர்களுக்கு வேண்டப் பட்டவர்களாகவோ உள்ளனர். அ.தி.மு.க.,வால் தான் சி.ஏ.ஏ., திட்டம் நிறைவேறியது என முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவர், எல்லாவற்றிற்கும், அ.தி.மு.க., மீது பழி போடுகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.* ஊத்தங்கரையில், ரவுண்டானா பகுதியில் இருந்து கல்லாவி ரோடு வரை, மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் வேடி, வேங்கன், சக்ரவர்த்தி, தேவராசு, நகர செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில் நேற்று வேலம்பட்டியில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி முன்னாள் தலைவர் அண்ணாதுரை, ரவிசந்திரன் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், நேற்று, ஓசூர் பாகலுார் சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே துவங்கி, 3 கி.மீ., துாரத்திற்கு மேல், அ.தி.மு.க.,வினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். அதேபோல், கெலமங்கலம் டவுன் பஞ்., அலுவலகம் முன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் தலைமையில், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணனும், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., அலுவலகம் முன்பு, முன்னாள் நகர செயலாளர் நாகேஷ் தலைமையில், அ.தி.மு.க.,வினர், மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ