உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., கட்சி ஆபீஸ் சூளகிரியில் இன்று திறப்பு

அ.தி.மு.க., கட்சி ஆபீஸ் சூளகிரியில் இன்று திறப்பு

கிருஷ்ணகிரி: கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கான, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் இன்று (செப். 13) காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை சூளகிரியில், ஓட்டல் கிருஷ்ணா இன் அருகில் திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு, அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். ஒன்றிய செயலாளர்கள் பாபு, பாலசுப்பிரமணி, மாதேஷ், ராமமூர்த்தி, சைலேஷ் கிருஷ்ணன், முருகன், கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி குத்துவிளக்கேற்றி, கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். எனவே, கட்சியின் இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை