உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாய தொழிலாளர்கள் சங்க 4வது மாவட்ட மாநாடு

விவசாய தொழிலாளர்கள் சங்க 4வது மாவட்ட மாநாடு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க, 4வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநில செயலாளர் முத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் கோரிக்கை குறித்து பேசினார்.மாநாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தின் பெயர் திருத்த மசோதாவை வன்மையாக கண்டிப்பது.உழைப்பாளி மக்களின் வாழ்வாதார திட்டத்தை சிதைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பல ஆண்டு காலமாக வீடு கட்ட இடமின்றி கூட்டு குடும்பமாக வாழும் விவசாய கூலித்தொழிலா-ளர்களுக்கு அரசு, 3 சென்ட் இடம் வழங்க வேண்டும். 4 லட்சம் ரூபாய் வீடு கட்ட வழங்கு-வதை, 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு அனுபவ அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும். 60 வயது முடிந்த அனைத்து விவசாய கூலித்தொழி-லாளர்கள், ஏழை, சிறு விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை