உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, கடந்த, 2022 ஜூலை, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளராக இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி இ.பி.எஸ்., தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து இ.பி.எஸ்., தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி அளித்த தீர்ப்பில், சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், சூரியமூர்த்தியின், உரிமையியல் நீதிமன்ற வழக்கை நிராகரித்தும் உத்தரவிட்டார்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், பெத்ததாளாப்பள்ளி எம்.ஜி.ஆர்., சிலை அருகில், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில், மகளிரணி மாவட்ட தலைவி சுகந்தி மாது, ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் பெருமாள், மீனவர் அணி அவைத் தலைவர் தர்மன், கிளை செயலாளர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.* ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். வடக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வேங்கன், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் ஆறுமுகம், முன்னாள் சேர்மன் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.* மத்துாரில், ஊத்தங்கரை அ.தி.மு.க., - -எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, நரேஷ், மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மனோகரன், புகழேந்தி, சக்தி மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், மத்துார் பஸ் ஸ்டாண்டில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !