அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் நியமனம்
வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், அ.தி.மு.க., சார்பில் பணியாற்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சூளகிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, சூளகிரியில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி அலுவலகத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினார். மேலும், தேர்தல் பணிகள் மேற்கொள்ள வசதியாக, வாக்காளர் பட்டியல் அடங்கிய பட்டியலை வழங்கினார்.