கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து, ஓசூர், மூக்கண்டப்பள்ளி, மத்திகிரி, ஜூஜூவாடி, பேடரப்பள்ளி, பேகேப்பள்ளி உள்ளிட்ட, 29 பகுதிகளில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அ.தி.மு.க., என்பது மக்கள் இயக்கம், 50 ஆண்டுகள் கடந்த, அப்படிப்பட்ட கட்சியை அழித்து விடுவோம், ஒழித்து விடுவோம் என ஓராண்டுக்கு முன் அரசியலுக்கு வந்த அண்ணாமலை பேசுகிறார். அது அவரால் மட்டுமல்ல, யாராலும் முடியாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்கி, கல்லுாரிகள், நீர் மேலாண்மை, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றியது. அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும். கடந்த, 82 ஆண்டு போராட்டமான கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேஷன், ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம் அமைக்கப்படும். தமிழகத்தில், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாம் செய்த திட்டங்களை போல், தேர்தலுக்கு பின் வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வின் எம்.பி., மத்தியில் உள்ள அரசிடம் நம் திட்டங்களை கேட்டு பெறுவார்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.