உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடந்தது. தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவன் தலைமை வகித்தார். தொட்டமஞ்சு பஞ்., முன்னாள் தலைவர் தங்கவேல், தன் ஆதரவாளர்களுடன் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி முன்னிலையில், தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் ஜாகீர் உசேன், ஓசூர் ஒன்றிய செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !