உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்-கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் தமிழ்செல்வி பேசினார். ஆர்ப்பாட்-டத்தில், போசன் டிராக்கர் செயலியில் முக அங்கீகாரம் பதி-வேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதை உடனே கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடை-யாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பணி ஓய்வுக்கு பிறகு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியமாக மாதம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். 1993ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும், 5ஜி மொபைல் போன், சிம் கார்டு மற்றும் வைபை இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை