உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அண்ணாதுரை நினைவு நாள் அமைதி பேரணி

அண்ணாதுரை நினைவு நாள் அமைதி பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி சென்ட்ரல் தியேட்டர் அருகில் துவங்கிய பேரணி, பெங்களூரு சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலக ரவுண்டானா வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அண்ணாதுரை சிலை அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து புதிய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா அருகிலுள்ள அண்ணாதுரை சிலைகளுக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க., அமைப்பு சாரா ஓட்டுனரணி மாநில செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் மற்றும் ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மேயர் சத்யா ஆகியோர் தலைமையில், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே இருந்து அமைதி ஊர்வலம் துவங்கியது. பின், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள்எம்.எல்.ஏ., முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவி லில், நேற்று மதியம் சமபந்தி விருந்து நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், துணை மேயர் ஆனந்தய்யா, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், தி.மு.க., சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை சிலைக்கு, பகுதி செயலாளர் ராஜி, கவுன்சிலர் குபேரன், ஒன்றிய செயலாளர் ஹரிஸ்ரெட்டி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் அண்ணாதுரை உருவ படத்திற்கு, மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, மாரம்பட்டி பஞ்., தலைவர் பூமலர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணகிரி நகர, அ.தி.மு.க., சார்பில், ராசுவீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு நகர செயலாளர் கேசவன் தலைமையில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில், அண்ணாதுரையின் 55வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி