உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுகோள்

தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுகோள்

தர்மபுரி, டிச. 19-மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஓய்வூதியர் தின விழா, தர்மபுரியில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். போக்குவரத்து நல ஓய்வூதியர் அமைப்பு மாநில இணை செயலாளர் குப்புசாமி துவக்கி வைத்து பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, -அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், பஞ்., செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 'காசில்லா மருத்துவம்' உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவ செலவு தொகையை திரும்ப பெற நீண்ட காலமாக, தேங்கியுள்ள மனுக்களை முத்தரப்பு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும். செலவுத்தொகை கேட்டு அனுப்பும் மனுக்களின் நிலையை அறிய, 'டிரேக்கிங்' சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை