உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் மாரப்பன், விவசாயி. இவர், கடந்த, 2023 டிச., 14ல் குடும்பத்துடன் வெளியே சென்ற சமயத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, 14.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மகாராஜகடை போலீசார் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும், கைரேகை நிபுணர்களின் தடயங்கள் மற்றும் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகள் பதிவின்படி, திருட்டில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த பிரசாந்த், 23, என தெரிந்தது. அவர் மீது, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்பட, 4 போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.நேற்று மாலை, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சுற்றித்திரிந்த பிரசாந்தை, தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்தனர். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரியில் பல்வேறு வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி