குறுவள மைய அளவில் கலைத்திருவிழா போட்டி
ஓசூர்: ஓசூர், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 1 முதல், 5 ம் வகுப்புக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. மொத்தம், 12 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி (தமிழ், ஆங்கில வழி) மாணவ, மாணவியர், மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுபோட்டி, பரதம், கிராமிய நடனம், ஓவியம், களிமண்ணில் உருவம் வரைதல் உட்பட மொத்தம், 11 வகையான போட்டிகளில் மொத்தம், 26 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை நிரூபித்தனர். மாணவ, மாணவியர் வெற்றி பெற பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலினி, வட்டார கல்வி அலுவலர் சதிஷ்குமார், ஆசிரிய பயிற்றுனர் பசவராஜ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.