மேலும் செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம்
08-Dec-2024
கிருஷ்ணகிரி, டிச. 19-காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பொதுப்பாதையின் நத்தம் பகுதி நிலங்களை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியதாக, அதேபகுதியை சேர்ந்த நாசன் என்பவர் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. கடந்த செப்.,ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளிடம், எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி தலைமையிலான வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்றனர். அதில் ஆக்கிரமிப்பிலுள்ள ஒரு வீட்டின் முகப்பை பொக்லைன் மூலம் இடித்தனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்போது, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, சட்டவிரோதம் என எச்சரித்தனர். அப்போது, 'வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு வைத்து செல்லுங்கள் ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகளை நாங்களே இடித்து அகற்றி கொடுக்கிறோம்' என, பொதுமக்கள் கூறினர். இதையடுத்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு ஒருவார காலம் அவகாசம் கொடுத்து சென்றனர்.
08-Dec-2024