உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் விழிப்புணர்வு முகாம் அரூர், நவ. 21-

பள்ளியில் விழிப்புணர்வு முகாம் அரூர், நவ. 21-

பள்ளியில் விழிப்புணர்வு முகாம்அரூர், நவ. 21- தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீசார் இணைந்து, இளம் வயது திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு செல்லும் வழியில், யாராவது தொந்தரவு செய்தால், உடனடியாக பெற்றோர் அல்லது, 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரூர் வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன், செவிலியர்கள், போலீசார், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !