உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் தடுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புகையிலை பொருட்கள் தடுப்பு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பென்னாகரம், தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உணவு பாதுகாப்பு, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள், புகையிலை பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் பக்க விளைவுகள், அதை தவிர்ப்பது, தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார் மேற்பார்வையில், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் லோகநாதன், முன்னிலை வகித்தார். பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள், பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், சைவ, அசைவ குறியீடு, அலர்ஜி தன்மை, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், தெளிவாக பொருட்களை கொண்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பள்ளி அருகாமையிலோ, தாங்கள் செல்லும் பகுதியில் ஏதேனும் கடைகளில் விற்பனையை கண்டால், ஆசிரியர்களிடம் அல்லது 94440 42322 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கவும், விழிப்புணர்வு செய்யப்பட்டது.புகையிலை பொருட்களின் உபயோகிப்பதால், வாய்ப்புற்று நோய், கேன்சர், கால் விரல்கள் செயலிழத்தல், நினைவு தடுமாற்றம் மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ