உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பேக்கரி ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பேக்கரி ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பூவதி வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாபு, 45, பேக்கரி கடை ஊழியர்; இவர் கடந்த, 31 இரவு ராயக்கோட்டை சாலை பாலக்குறி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, மூளையில் ரத்தக்கசிவால் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள், பாபுவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி தலைமையில், டாக்டர்கள் சந்திரசேகரன், தினேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கண்காணிப்பில், கோவை, சென்னையிலிருந்து வந்த உடலுறுப்பு தான மருத்துவக் குழுவினர், பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழி உள்ளிட்டவற்றை கோவை மருத்துவக் கல்லுாரிக்கும், தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரிக்கும் அனுப்பி வைத்தனர்.உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பாபுவின் உடலுக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மருத்துவர்கள் நந்தபிரபு, பிரசன்ன வெங்கடேசன், ஆனந்தகுமார், இளம்பருதி, ஜோஷ்னா, அண்ணாதுரை, இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை