உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை

பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை

கிருஷ்ணகிரி, ருஷ்ணகிரியில், சென்னை சாலையிலுள்ள பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவி மெல்பா தார்த்தி மற்றும் நிக்கிதா ரெட்டி ஆகியோர், 500க்கு, 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளனர். தீக்ஷா, 481 மதிப்பெண்களுடன், 2ம் இடமும், நரேந்திரன், 472 மதிப்பெண்களுடன், 3ம் இடமும் பெற்றுள்ளனர். மேலும், தீக்ஷிதா, தேவசகாயினி, ஆக்விக்கா ஸ்ரீ ஆகியோர், தமிழில், 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளியின் நிறுவனர் மணி, பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில், தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், உஷா சந்தோஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.பாரத் இன்டர்நேஷனல் பள்ளி, ஆகாஷ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மேல்நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு மருத்துவம், ஜே.இ.இ., ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஆகிய தேர்வுகளுக்கு வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்க உள்ளது. மேலும், 8, 9, 10ம் வகுப்புகளுக்கு பவுன்டேஷன் கல்வி அளிக்கப்பட உள்ளதாக, பள்ளி நிறுவனர் மணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை