உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியின், ஓசூர் சட்ட-சபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிலரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம், பவானி பேலஸ் மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், மாநில செயற்-குழு உறுப்பினர் நாகராஜ், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசும்போது, ''எஸ்.ஐ.ஆரை பார்த்து, தி.மு.க., பயப்ப-டுகிறது,'' என்றார்.மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேசும்போது, ''தமிழ-கத்தில் தாமரை மலர வேண்டும். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு பயப்படும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். உண்மையான வாக்குரிமை இருப்பவர்களுக்கு அதை பெற்றுத்தர வேண்டும். தகுதியற்ற வாக்காளர்களை நீக்க வேண்டும். இது தான், எஸ்.ஐ.ஆர்., நோக்கமாகும்,'' என்றார்.* ஊத்தங்கரையில், பா.ஜ., கட்சியின், 2026ம் ஆண்டு சட்ட-சபை தொகுதி ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக்-கூட்டம் நேற்று நடந்தது. ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். தொகுதி இணை அமைப்பாளர் சிவக்குமார், தொகுதி பொறுப்பாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஆடிட்டர் மகாராஜன், தாமோதரன், கார்த்திகேயன், வெங்-கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை