உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கவர்னர் ரவியை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கவர்னர் ரவியை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி:தமிழக கவர்னரின் அரசியல் சாசன விரோத போக்கை கண்டித்தும், பதவி விலக வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ., கட்சி சார்பில் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராஜூ தலைமை வகித்தார். நகர செயலாளர் உபேத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பின், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமைய்யா நிருபர்களிடம் கூறியதாவது: கவர்னர் ரவி, முறை தவறி முறையில்லாத செயல்களை செய்கிறார். கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார். மத்திய அரசுக்கு துாதுவராக இருக்க வேண்டியவர், மாநில அரசுக்கு எதிராக இருக்கிறார். சட்டத்தை அவர் மதிக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கும், இவர் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் போட்ட ஆணையை புறக்கணிக்கிறார். இவரது செயல்கள், கருத்துக்கள் தவறானது என்று சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் பழனி, மாநில குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் கண்ணு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை