உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை

மழையால் ஓசூரில் துவங்கிய குளிர் சூடு பிடித்துள்ள போர்வை விற்பனை

ஓசூர், ஓசூர் பகுதியில் குளிரின் தாக்கம் துவங்கியுள்ள நிலையில், போர்வை விற்பனையில் வட மாநில வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழக எல்லையான ஓசூரில் ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டில் கடந்த இரு மாதமாக விட்டு, விட்டு மழை பெய்துள்ளதால், குளிரின் தாக்கம் முன்கூட்டியே துவங்கி விட்டது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, குளிரின் தாக்கத்தை அதிகமாக உணர முடிகிறது.குளிர் காரணமாக இரவில் துாங்குவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் குளிரை தாங்கும் வகையிலான போர்வைகள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. ஓசூரிலுள்ள தளி ஜங்ஷன் மேம்பாலத்திற்கு அடியில், சர்வீஸ் சாலை மற்றும் ராயக்கோட்டை சாலையோரம் உட்பட பல இடங்களில் குடில் அமைத்து, ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியிலிருந்து குளிர் தாங்கும் பெட்சீட்டுகள், படுக்கை விரிப்புகளை வாங்கி வந்து, வட மாநில இளைஞர்கள் விற்கின்றனர். இது தவிர ஸ்வெட்டர், ரெயின் கோர்ட் போன்றவற்றையும் விற்பனை செய்கின்றனர்.இது குறித்து, வட மாநில இளைஞர்கள் கூறும்போது, 'ஒருவர் போர்த்தி படுக்கும் பெட்சீட்டுகள், 175 முதல், 750 ரூபாய் வரை விலையிலும், இருவர் போர்த்தி படுக்கும் பெட்சீட்டுகள், 1,000 ரூபாய் வரையும், விற்பனை செய்கிறோம். இன்னும் இரு மாதங்களுக்கு விற்பனை நன்றாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !