மேலும் செய்திகள்
தமிழக வி.சி.,யினர் மீது வன்னியர் சங்கம் புகார்
06-Nov-2024
ஓசூர்: கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த, வி.சி., கட்சி ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் நுழைவாயில் அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், தலைவர் கோவிந்தராஜூலு உட்பட, 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதே போல் ஊத்தங்கரையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 45 பேரை போலீசார் கைது செய்தனர்.* கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, மத்திய மாவட்ட, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், நேற்று காலை, ஆர்ப்பாட்டம் நடத்த கூடினர். மேலும், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள் சோமசுந்தரம், மஞ்சுநாத் ஆகியோர் தலைமையில், 10 பேரை மட்டும் எஸ்.பி.,யிடம் மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர். அதன் பின் அவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
06-Nov-2024