உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுகாதார துணை மையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கட்டடம்

சுகாதார துணை மையத்துக்கு ரூ.50 லட்சத்தில் கட்டடம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பரம் கிராமத்தில், சுகாதாரத்துறை, 15வது நிதிக்குழு மானியம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சுகாதார துணை மைய கட்டடம் கட்டுவதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்-குமார் பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மோகன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கேசவன், நகர செயலாளர் விமல், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கணேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய இணை செயலாளர் முனிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ