மேலும் செய்திகள்
மத்திய அரசின் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
28-Jun-2025
கண்ணப்பா டிரைலர்
16-Jun-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:மேன்மை பொருந்திய பணிகளுக்காக, இந்திய அரசு பத்ம விருது-களை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளை-யாட்டு, தொழில் நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது விருதுகள் வழங்கப்பட-வுள்ளது. தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தி-யாசமின்றி வழங்கப்படுகிறது. விருதுகள் தொடர்பான விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை www.padmaawards.gov.inஎன்ற இணை-யதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள், 2025ம் ஆண்டிற்கான பத்ம விருதிற்கான விண்ணப்பம் எனக் குறிப்-பிட்டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், மாவட்ட விளையாட்டு வளாகம், ராயக்கோட்டை சாலை, வகாப் நகர், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
28-Jun-2025
16-Jun-2025