உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் பணி 68 சதவீதம் நிறைவு

போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் 33 ஏரிகளுக்கு கால்வாய் அமைக்கும் பணி 68 சதவீதம் நிறைவு

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட் டம், பாரூர் ஏரியில் இருந்து போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்திலுள்ள, 33 ஏரிகளுக்கு புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள, 33 ஏரிகள் மற்றும், 8 தடுப்பணைகளுக்கு பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் கோரிக்கையை ஏற்று, கடந்த, 2023, மார்ச், 9ல், 19 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்ட பணிக்காக, 43.85 ஹெக்டேரில், 24.56 ஹெக்டேர் நிலம் கையக படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள, 19.28 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இக்கால்வாயின் தண் ணீர் கொள்ளளவு, 46.13 கன அடி, அடித்தள அகலம், 2.20 மீட்டர், கால்வாயின் தண்ணீர் செல்லும் உயரம் ஒரு மீட் டர். தண்ணீர் வழங்க, 21 நாட்களாகும். தற்போது கால்வாய் வெட்டும் பணிகள், 68 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்து, 33 ஏரிகளிலும் நீரை நிரப்பி விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கால்வாய் வெட்டும் பணிகளையும், புதுார்புங்கனை பஞ்., தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்திலிருந்து பாப்பன்குட்டை ஏரிக்கு, 4 கி.மீ., துாரத்தில் நீரேற்றும் நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.நீர்வளத்துறை செயற்பெறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை